--- --:--:-- --

கன்னியாகுமரிக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்..!

02

ன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் வரும் 5, 6 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் வரும் 7ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon