--- --:--:-- --

மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்..!

6

தென்காசி மாவட்டத்தில் உடல் நலம் குன்றி மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் ராயப்பேட்டையை சேர்ந்த சண்முகம் நீண்ட நாட்களாக மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் கசிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய அவரது உறவினர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் நுரையீரல் தனியார் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.

 

அதேபோன்று கல்லீரல், சிறுநீரகம், கண்ணின் கருவிழிகளும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் தமிழக அரசு அறிவிப்பின் அடிப்படையில் மருத்துவர்கள் மரியாதை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon