--- --:--:-- --

டெல்லி வன்முறை குறித்த ட்ரம்பின் பதிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

1.1

டெல்லி வன்முறை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் பெர்ணி கண்டனம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் போராடியவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் அண்மையில் இந்தியாவிற்கு வந்திருந்த டிரம்ப்பிடம் டெல்லி வன்முறை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்று பதிலளித்தார். டிரம்பின் இந்த பதில் மனித உரிமைகள் மீதான தலைமையின் தோல்வியை காட்டுவதாக பெர்ணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர் இந்தியாவில் 20 கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் டெல்லி வன்முறையில் சுமார் 27 பேர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon