தாமதமாக வரி செலுத்தினால் ஒரு சதவீதம் அபராதம் : இபிஎஸ் கண்டனம்
மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவர்கள் தாமதமாக வரி செலுத்தினால் ஒரு விழுக்காடு அபராத தொகை வசூலிக்கப்படும் என்று அறிவிப்பிற்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்பொழுது வருகை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் தாமதத்திற்கு ஒரு விழுக்காடு அபராதமும் விதிக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.
திமுக அரசின் இரட்டை வேடத்தில் தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக விதிக்கப்பட்டுள்ள ஒரு விழுக்காடு அபராத கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





