--- --:--:-- --

ஜெயக்குமார் சிறையில் இருந்து விடுவிப்பு

1

புழல் சிறையில் இருந்து நேற்று மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் நேற்று மாலை ஏராளமானோர் குவிந்தனர்.

 

ஆனால் சிறை விதிகளின்படி மாலை 6 மணிக்கு மேல் வெளியே விட இயலாது என்ற காரணத்தால் இன்று காலை 6 மணிக்கு அவர் வெளியே வருவார் என தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து தற்பொழுது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காலை சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். திமுக பிரமுகர் மீது தாக்குதல். சாலைமறியல் உள்ளிட்ட வழக்குகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Right Menu Icon