ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உசிலம்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் – வள்ளி மீனா தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்த நிலையில் பெற்றோர் குழந்தையை கவனித்து வந்துள்ளனர். இதில் குழந்தை வீட்டு தோட்டத்தின் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் விழுந்து உயிரிழந்துள்ளான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






