--- --:--:-- --

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

10

சென்னை அடுத்து திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எதிரொலியாக ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே விடுதியுடன் கூடிய தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த ஈரோட்டை சேர்ந்த மாணவி சுமதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக தனியார் கல்லூரிக்கு ஒரு வார காலம் விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை அவர்களது சொந்த ஊர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

Right Menu Icon