--- --:--:-- --

ஒமிக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று..!

6

மிக்ரான் சத்தமே இல்லாமல் கொல்லும் தொற்று எனவும் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து மீள நீண்டகாலம் பிடிக்கிறது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

உச்சநீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் நேரடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். ஓமிக்ரான் லேசான பாதிப்புகளை தான் ஏற்படுத்தும் என்றும் இதனால் கவலை கொள்ள தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.

 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் அலையில் பாதிக்கப்பட்டபோது 4 நாட்களில் குணமடைந்துவிட்டதாக கூறினார்.

 

ஆனால் மூன்றாம் அலை சத்தமில்லாமல் கொல்லும் தொற்று எனவும், பாதிக்கப்பட்டால் குணமடைந்து மீள்வதற்கு 25 நாட்கள் வரை ஆகிறது என்றும் இது தனது சொந்த அனுபவம் என்றும் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon