தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!!
கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் புகையிலை, பான், குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டு கடைகளில் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கோவையிலும் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள்,காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரும் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இருந்தாலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையினை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

அதனடிப்படையில் கோவையில் இன்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சூலூர் பகுதியில் 50 கிலோ புகையிலை பொருட்களும், சிங்காநல்லூர் பகுதியில் 20 கிலோ புகையிலை பொருட்களும், கவுண்டம்பாளையம் பகுதியில் 30 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





