--- --:--:-- --

மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக கூறி செவிலியர் தற்கொலை முயற்சி..!

6

னியார் மருத்துவமனை மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக கூறி செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 24 வயது பெண் ஒருவர் செவிலியராக பணியில் சேர்ந்துள்ளார்.

 

கடந்த 23ஆம் தேதி மருத்துவர் முரளி அழைப்பின் பேரில் அவருடன் ஓபி பார்க்க சென்றுள்ளார். அவரிடம் மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவரிடம் மனைவியிடம் செவிலியர் முறையிட்டுள்ளார். எனினும் அதுகுறித்து யாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவரின் மனைவியும், மருத்துவருமான விமலாதேவி அங்கு பணிபுரிவதால் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon