ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யும் விவகாரம் ..!
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் காவல்துறையுடன் கலந்துரையாடி அதற்கான முடிவு எடுப்பார் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை டிஎன்இஜிஏ வில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ரசிகர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஓராண்டில் மின் ஆளுமை முகமை பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வருவதாகவும் இ சேவை மையத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்ததாகவும் கூறினார்.
ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஆன்லைன் விளையாட்டு தடைசெய்வது சைபர் கிரைம் வேலை என்றார். தகவல் தொழில் துறைக்கும் சம்பந்தம் இல்லை என்றும் வேண்டுமென்றால் உரிய நேரத்தில் முதலமைச்சர் காவல்துறையினருடன் கலந்துரையாடி அதற்கான முடிவை எடுப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.






