கல்வி நிதியில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கைக்கான கல்வி நிதி ₹600 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்விநிதி வழங்குவதில் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் MP சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் இருப்பதை சுட்டிக்காட்டிய மகேஸ், மத்திய அரசு இனியாவது மனமிரங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.





