ஈரோட்டில் 25ஆம் தேதிக்கு மேல் வெளி நபர்கள் யாரும் இருக்கக்கூடாது..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் பிரச்சாரம் ஓய்வடைகிறது.
சிவக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளி மாவட்ட நபர்கள் யாரும் இருக்கக்கூடாது எனவும் மாலை ஐந்து மணி முதல் வெளி மாவட்ட நபர்கள் வெளியேறிவிட வேண்டும் என தெரிவித்தார்.






