--- --:--:-- --

சிவப்பு மண்டல பகுதிகளில் யாரும் வெளியே வரக்கூடாது

4

கொரொனாவின் ஹாட்ஸ்பாட் ஆன சிவப்பு மண்டலத்தில் உள்ள மக்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐடி நிறுவனங்கள், கால் சென்டர்கள், குளிர்பதனம் பொருட்களை சேகரிக்கும் மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை 33 சதவீத ஊழியர்களுடன் பணியை தொடரலாம். செங்கல் சூளை, சிறு குறு தொழில்கள், உணவு உற்பத்தித் துறைக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு சலூன் மற்றும் ஸ்பா போன்றவைகளை எதிராக விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரின் ஓட்டுநர் உடன் பின் பக்க இருக்கையில் 2 பேர் உட்கார்ந்து செல்ல அனுமதிக்கப்படும்.

 

மோட்டார் சைக்கிளை பொறுத்தவரை ஒருவர் மட்டுமே பயணிக்கவேண்டும். சைக்கிள் ரிக்ஷா ஆட்டோ டாக்சி மற்றும் பேருந்துகளை இயக்க கூடாது. நாடு முழுவதும் 160 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இடம்பெற்றன.

 

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், தென்காசி, திருவாரூர், நாமக்கல், திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Right Menu Icon