கேரளாவில் ஏப்.14 க்கு பின் ஊரடங்கு ஒரே அடியாக விளக்கப்பட மாட்டாது !
கேரளாவில் கொரொனா ஊரடங்கு வரும் 15ஆம் தேதி ஒரே அடியாக விளக்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது. ஊரடங்கு விளக்குவது தொடர்பாக மாநில அரசு அமைத்த 17 உறுப்பினர் ஆலோசனைக் குழு இந்த பரிந்துரையை அளித்துள்ளதாக திருவனந்தபுரத்தில் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தடையை படிப்படியாக விளக்கினால் போதுமானது என்று ஆலோசனை குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று பரவல், நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஊரடங்கு விளக்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து மாவட்டங்களுக்கு ஊரடங்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






