தமிழகத்தில் கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரனா வைரஸ் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் இதுவரை கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் நேபாளத்தில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பதால் அதனை சுற்றியுள்ள இந்திய மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சீனாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளாரா என உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.






