--- --:--:-- --

“கொரோனா தொற்று இல்லாத மாநிலமானது கோவா!!” பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்ததாக அறிவிப்பு!!

12

இந்தியாவில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான 7 பேரும் சிகிச்சையில் குணமான நிலையில், தற்போது மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை அம்மாநில அரசு பெருமையாக அறிவித்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று வரை நாடு முழுவதும் 1600-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் எந்த மாநிலமும் விதிவிலக்கல்ல என்பது போல அனைத்து மாநிலங்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின. வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் பாதிப்பு குறைவாக இருந்தது.

 

இந்தியாவில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்கு பெயர் போன மாநிலம் கோவா ஆகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உல்லாசபுரியாக திகழும் கோவா மாநிலத்தில் கடந்த 3-ந்தேதி 7 பேருக்கு கொரோ தொற்று கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோவா அரசு முனைப்பாக செயல்பட்டது. இதன் விளைவாக அம்மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.

 

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த 7 பேரும் குணமாகி விட்டதாகவும், தற்போது கோவா மாநிலம் கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாநிலமாக திகழ்வதாக அம்மாநில சுகாதார அமைச்சர் விஹ்வஜித் ரானே டுவிட்டர் பதிவில் பெருமையாக தெரிவித்துள்ளார். கோவாவை கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக்க சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரையும் பாராட்டி பெருமையடைவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon