--- --:--:-- --

மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. பதற்றத்தில் கேரளா..!

9

மூணாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் வசிப்பதால் மீண்டும் வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 4 பேருக்கு நிஃபா வைரஸ் தாக்கிய நிலையில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

 

வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுவதாகவும் பயணத்தில் உள்ள வவ்வால்களை சோதனை செய்வதில் அவற்றிற்கு நிஃபா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில மூணாறு. எம்.ஜி காலனியில் உள்ள மரங்களை ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால் மீண்டும் நிஃபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

 

சுகாதார துறையும் வனத்துறையும் சேர்ந்து வவ்வால்களை உடனடியாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon