whatsapp குரூப் காலில் இனி 31 பேர் பங்கேற்கலாம்..!
whatsapp குழு அழைப்பில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கடி புதுவிதமான அப்டேட்டுகளை ஏற்படுத்திவிடுகிறது.
அதன்படி குழு அழைப்பில் பங்கேற்கும் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டி உள்ளது. 31 நபர்கள் whatsapp வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 15 பேர் மட்டுமே குழு அழைப்பில் அழைக்க அனுமதிக்கப்பட்டனர். விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





