இரு சக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பு..!
புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பு ஒன்று வெளியே வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பகுதியில் மரசெக்கு எண்ணெய் கடை நடத்தி வருபவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அந்த வாகனத்தில் இருந்து பாம்பு வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த வனத்துறையினர் சண்முகம் மெக்கானிக் உதவியுடன் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்றடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தார் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






