சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்..!
நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதைக்கேட்டதும் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆனாலும் வாழ்த்து கூறி வருகிறார்கள். சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகன் நவீன் இருவரும் காதலிக்கிறார்களாம்.
கண்மணி சேகர் அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர். சன் டிவியில் தற்போது பணியாற்றும் இவர் அதற்கு முன் மாலை முரசு, ஜெயா டிவி, நியூஸ் 18 மற்றும் காவேரி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் நேற்று நவீன் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலிப்பதாக அவருடன் எடுத்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.






