--- --:--:-- --

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா..! அவசர ஆலோசனை..!

3

தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை உருமாற்றம் பெற்று கொரொனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பு இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கொரொனா வைரஸ் பெருகும் போது அதன் சுவர்களில் மாறுபாடு ஏற்பட்டால் அது உருமாற்றம் பெற்ற வைரஸ் என அழைக்கப்படுகிறது, தென்னாபிரிக்காவில் திடீரென தொற்று பரவல் அதிகரித்த நிலையில் அங்கு புதிய வகை உருமாற்றம் பெற்ற கொரொனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த புதிய வகை வைரஸ் பழைய வைரஸ்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளதாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உயிரித் தகவலியல் துறை பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்துக்கு பிரிட்டன் தற்காலிகமாக தடை விதித்த நிலையில் இஸ்ரேலில் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைக்கு தடைவிதித்துள்ளது.

Right Menu Icon