இலங்கை அதிபர் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய தேவைகளாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்துள்ளார். மின்சாரத்தை அத்தியாவசிய தேவையாக அறிவிக்கக்கோரி மின்சார சபை பொறியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் மின் ஊழியர்கள் பணி விலகுவார்கள் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மின்சார விநியோகத்தை அத்தியாவசிய தேவையாக அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்துள்ளார்.






