நேதாஜி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!
டெல்லியில் நேதாஜியின் கிரானைட் சிலை அமைய உள்ள இணையத்தில் தற்காலிகமாக முப்பரிமான லேசர் நேதாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரமாண்டமாக கிரானைட் கற்களால் சிலை நிறுவப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதன்படி அதன் பணி முடிவடையும் வரை லேசர் வடிவிலான முப்பரிமான சிலை அமைக்கப்படும் என்பதையும் பிரதமர் கூறியிருந்தார்.
அதன்படி நேதாஜியின் பிறந்த நாளில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் முப்பரிமான நேதாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு தலைவணங்க மறுத்தவர் என புகழாரம் சூட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





