விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..!
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 40 வது நாளாக போராடிக் கொண்டுள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக மத்திய அரசு விவசாயிகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது . இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறினார்.
ஆனால் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வரலாம் சட்டங்களை திரும்பப் பெற இயலாது என அரசு உறுதிபட தெரிவித்து விட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.







