--- --:--:-- --

கோவை : ஆலாந்துறை அருகே இருட்டுப்பள்ளம் பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலியான பரிதாபம்.வனத்துறையினர் விசாரணை !!!

கோவை : ஆலாந்துறை அருகே இருட்டுப்பள்ளம் பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலியான பரிதாபம்.வனத்துறையினர் விசாரணை !!!

கோவை நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆலாந்தறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி,  கணுவாய் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் ஊருக்குள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். தொடர்ந்து விவசாய நிலங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தி செல்கின்றன.

 

இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உட்பட்ட ஆலந்துறை இருட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் காட்டு யானை ஒன்று அந்தப் பகுதியில் உணவுக்காக வந்தது.

 

அப்போது, மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்ட ஆண் யானை பரிதாபமாக இறந்தது.இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க அந்தப் பகுதி மக்கள் காட்டுப் பகுதிக்கு சென்றபோது யானை இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.

 

தொடர்ந்து தொண்டாமுத்தூர் வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஆண் யானையை பிரேத பரிசோதனைக்காக மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

மேலும்,இதுகுறித்து விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்திருந்த துரையிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து யானைகள் உயிரிழப்பதும், யானைகளால் மனித உயிர்கள் பறிபோகும் அவலமும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமாக உள்ளது. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon