கோவையில் 5 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை..! தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!!!
சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிறந்ததிலிருந்தே கல்லீரல் கொலஸ்டாசிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சையில் குணமான நிலையில், பின்னர் உடல்நிலை மோசமடைந்து மருத்துவ சிகிச்சைகளும் தோல்வியுற்றது.
 
தொடர்ந்து சிறுவனைக் காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாயின் கல்லீரலின் ஒரு பகுதி லாபாஸ்கோபிக் முறை மூலம் எடுக்கப்பட்டு டாக்டர்கள் சுவாமிநாதன்,ஆனந்த் வியாஜி, விக்னேஷ், பிரபாகரன் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
5வயது சிறுவனுக்கு மாற்றுஅறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு சாதனை படைத்தனர்.

ஐந்து வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த கல்லீரல் நிபுணர்களுக்கு ஜெம் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.






