--- --:--:-- --

குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிலும் நஞ்சு..!

4

குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கில் நஞ்சு கலந்திருப்பதாக அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. கர்நாடகாவில் கேக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தது.

 

கர்நாடகா முழுவதும் 12 மாதிரிகளை உணவுத்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தினார். அதில் ரெட் வெல்வெட், பிளாக் பாரஸ்ட் போன்ற கேக்குகளில் உடம்புக்கு தீங்கு உண்டாக்கும் பொருட்கள் சேர்க்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அளவுக்கதிகமாக சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளால் ஒவ்வாமை, ஆஸ்துமா, செரிமான கோளாறு, சுவாச பிரச்சனை மட்டுமல்லாது புற்றுநோய் கூட ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

 

மருத்துவ நிபுணர்கள் கோபி மஞ்சூரியன், இறைச்சி கவாஸ்காரர்கள் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாயை தொடர்ந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருப்பது பலரையும் கவலை அடைய செய்துள்ளது. அரசு வகுத்துள்ள தர கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

Right Menu Icon