பாஜக பிரமுகர் மீது அவரது மனைவி புகார்..!
சென்னையில் ஆட்களை வைத்து தன்னை கடத்தி தாக்குதல் நடத்தியதாக பாஜக பிரமுகர் மீது அவரது இரண்டாவது மனைவி புகார் அளித்துள்ளார். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட தலைவராக இருக்கும் சிவக்குமார் லட்சுமி பிரியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது குடும்ப பிரச்சனை காரணமாக லட்சுமி பிரியாவை ஆள் வைத்து கடத்தி மிரட்டியதாக சிவகுமார் மீது புகார் அளித்துள்ளது.






