--- --:--:-- --

ஊரடங்கின் போது இயங்கிய வங்கி..! ஊழியர்களுடன் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்

201909232147148838_Bank-employees-strike-postponed_SECVPF

கொரொனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

 

தமிழகத்தில் 1800கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 பேர் பலியாகி இருக்கின்றனர். மக்களை பாதுக்காக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தடையை மீறி செயல்பட்டு வந்த இந்தியன் வங்கியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதுமட்டுமின்றி, ஊழியர்களையும் வங்கிக்குள் வைத்து சில் வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon