நளினிக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்க முடிவு..!
பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாதம் விடுப்பு கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், ஹேமலதா கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு ஒரு மாதம் சிறை வழங்க வேண்டும் எனவும், இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்தவித முடிவும் எடுக்காததால் விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் நளினியின் தாயார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு நளினிக்கு ஒரு மாதம் சிறை விடுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.






