--- --:--:-- --

இளைஞர் இறப்பில் மர்மம்.. 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் கைது..!

7

சிவகங்கை அருகில் இளைஞர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் கீழப்பகுடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் அன்ராஜ் இவர் நேற்று இரவு தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில் இளைஞர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறும் உடலை வாங்க மறுத்தும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon