--- --:--:-- --

போனில் ஆபாசமாக பேசிய மர்ம நபர்.. தர்ம அடி கொடுத்த பெண்கள்..!

3

சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்களை ஃபோனில் ஆபாசமாக பேசியவரை அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றிய பகுதியில் அங்கன்வாடி பெண் ஊழியர்களை ஃபோனில் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்த நபரை பெண் ஊழியர்கள் மடக்கி பிடித்தனர்.

 

போனில் அவரது ஆசைக்கிணங்க பேசி ஒரு இடத்திற்கு வர செய்த பெண்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon