விருமன் படத்தில் நடிக்கும் மைனா நந்தினி..!
முத்தையா இயக்கி கார்த்தி நடித்துக்கொண்டிருக்கும் விருமன் படத்தில் பிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினி நடிக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் இரண்டாவது மகள் நடிக்கிறார். இதற்காக சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் டிவீட் செய்திருந்தார்.
விருமன் படத்தில் மைனா உடன் கார்த்திக் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். உங்க கூட சேர்ந்து நடிப்பது ரொம்ப சந்தோஷமாகவும், ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன் எனவும் தேங்க்ஸ் சொல்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





