டாக்டராக ஆக வேண்டுமென்பது கனவு: மமிதா பைஜூ
‘ஜனநாயகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ டாக்டர் கனவு தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடி உள்ளது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், சினிமாவில் நடிப்பதற்கு முன் டாக்டராக வேண்டுமென தான் கனவு கண்டதாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த தனது தந்தை எதிர்பாராவிதமாக டாக்டராகி விட்டதாகவும் கூறினார்.






