கால்நடையை இரையாக விழுங்கி செரிக்க முடியாமல் தவித்த மலைப்பாம்பு..!
உத்திர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் உள்ள சிகாரி என்ற கிராமத்தில் கால்நடையை இரையாக்கி விழுங்கிய மலைப்பாம்பு ஒன்று அதனை செரிக்க முடியாமல் மண்ணில் உருள்வதை கண்டு ஊர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் மலைப்பாம்பை கயிற்றால் கட்டி டிராக்டர் மூலம் எடுத்துச் சென்றனர். அதற்கு சிகிச்சை அளித்த பின்னர் தாண்டியா வனப்பகுதிக்கு சென்று விட்டு விட்டதாக வனத் துறையினர் கூறினர்.







