கண்ணிவெடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!
உக்ரைன் சாலையில் ரஷ்ய வீரர்கள் போட்டு விட்டு சென்ற கண்ணிவெடிகளை உக்ரைன் வாகன ஓட்டிகள் சாதாரணமாக கடந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
தலைநகர் கீவ் நகரில் உள்ள பகுதியில் ரஷ்ய வீரர்கள் ராணுவ கவச வாகனங்களை அழிக்கும் பொருட்டு சாலை மற்றும் சுரங்க பாதையில் ஏராளமான கண்ணிவெடிகளை வைத்து விட்டு சென்றனர். இந்த கண்ணி வெடிகளை வாகனங்கள் சாதாரணமாக கடந்து செல்கின்றன.






