--- --:--:-- --

சீனாவில் தீ விபத்தில் இருந்து காப்பாற்ற மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்..!

3

சீனாவில் தீப்பிடித்த வீட்டில் இருந்து தனது ஐந்து வயது மகனையும், மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி தாயொருவர் காப்பாற்றியுள்ளார். யுனான் மாகானத்தில் உள்ள யான்சாங் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் தப்பி சென்றனர்.

 

ஆனால் மூன்றாவது மாடியில் இருந்த பெண்ணால் அவசர வழியில் இறங்க முடியாததால் தனது ஐந்து வயது குழந்தையை அங்கிருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசினார். இதனை எதிர்பார்த்து காத்திருந்த அக்கம்பக்கத்தினர் கைகள் மற்றும் போர்வையில் உதவியுடன் அந்த குழந்தையை காப்பாற்றி னார்.

 

அதன் பின்னர் அந்தப் பெண்ணும் அங்கிருந்த தண்ணீர் குழாயை பிடித்துக்கொண்டு தொங்கியபடி எரியும் வீட்டில் இருந்து தப்பினார்.

Leave a Reply

Right Menu Icon