குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி..!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஐயக்காரன் இயக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி யோகம்மாள் என்பவர் தற்கொலைக்கு முயன்றவர். அவர் தனது 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மூன்று வயதில் மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தைகள் உயிரிழந்தன. யோகம்மளை அருகில் இருப்பவர்கள் காப்பாற்றி கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பட்டதாரியான யோகம்மாள் ஊரடங்கால் வேலையின்றி மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. iது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






