மாடியிலிருந்து கைக்குழந்தையுடன் தாய் கீழே விழுந்த விபரீதம்..!
சென்னையில் பிறந்து 15 நாட்களான கைக்குழந்தையுடன் மொட்டை மாடியில் வேடிக்கை பார்த்த போது கீழே விழுந்த குழந்தை உயிரிழந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய்க்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை – மதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் நிஷாந்த் யமுனா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு கடந்த மார்ச் மாதம் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் குழந்தையை இன்குபேட்டர் பாதுகாப்பு பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். பின்னர் யமுனா சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பியுள்ளார்.
பிறக்கும் போதே குழந்தை மஞ்சள்காமாலையுடன் பிறந்துள்ளது என்ற வருத்தத்தில் இருந்த யமுனா தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் குணம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி யமுனா தன் குழந்தை மற்றும் கணவருடன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்க குழந்தை வீறிட்டு அழுது உள்ளது. அப்பொழுதுதான் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.
மாடியில் இருந்து விழுந்தவருக்கு இரண்டு காலிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. முதுகுத்தண்டு முறிந்துள்ளது. குழந்தை இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் வீட்டிலேயே குழந்தையை வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





