--- --:--:-- --

கவனக்குறைவால் மகன் மீது கார் ஏற்றிய தந்தை..!

9

கன் நிற்பதை கவனிக்காமல் தந்தை இயக்கிய காரில் ஏறி 4 வயது மகன் உயிரிழந்த அதிர்ச்சிகர வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள குடியிருப்பின் கீழே இருந்த காரை அதன் உரிமையாளர் எடுத்துள்ளார்.

 

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது நான்கு வயது மகன் முன்பாக வந்து இருப்பதை அறியாமல் காரை இயக்கியுள்ளார். கார் சிறுவன் மீது ஏறியதால் அதிர்ச்சி அடைந்த தந்தை உடனடியாக காரை நிறுத்திவிட்டு படுகாயமடைந்த மகனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

 

ஆனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை மகனை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Right Menu Icon