அதிசய குழந்தை..பிறந்த 20 நிமிடத்தில் இறந்த சோகம்..!
பீகாரில் நான்கு கால்கள், நான்கு கைகள், நான்கு காதுகளுடன் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிஹார் மாநிலத்தில் பிரஷிதா பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்த்தனர்.
அங்கு அந்த பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை பார்த்ததும் மருத்துவர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். அந்த பெண்ணுக்கு நான்கு கால்கள், நான்கு காதுகள், நான்கு கைகள் இருந்தன.
குழந்தையின் உடலை பரிசோதித்த பொழுது குழந்தைக்கு இரண்டு இதயம் இருந்ததும் தெரிய வந்தது. அந்த குழந்தை பிறந்த 20 நிமிடங்களில் உயிரிழந்து விட்டது.





