--- --:--:-- --

சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை அமைச்சர் பஸ்கரன் திறந்து வைத்தார்!

14

சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி மையம் மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் 50 படுக்கை வசதிகள் கொண்ட மறுவாழ்வு மையத்தினை திறந்துவைத்தார்.

 

இத்திட்டத்தில் மாவட்டத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித் திரிபவர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் தேவையான சிகிச்சை வழங்குவதுடன், அவர்கள் நன்றாகக் குணமடைந்து தனது இருப்பிடத்தை தெரிவிக்கும் வரை அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை தி பேனியின் பவன்டேசன் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல், துணை இயக்குனர் யசோதா மணி, நிலைய மருத்துவர் வனிதா, மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon