அசைவ பிரியர்களுக்காக வந்துள்ளது செயற்கை சிக்கன்..!
உலகின் முதல் செயற்கை சிக்கனை சுவைக்க சிங்கப்பூர் ரெடியாகிவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை முந்திக்கொண்டு செயற்கை சிக்கன் இறைச்சிக்கு சிங்கப்பூர் அனுமதியளித்துள்ளது. உலகில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருகிறது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவு தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. உலகளவில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளையே மக்கள் அதிக அளவில் விரும்பி உண்ணுகின்றனர். அதிலும் சிலருக்கு அசைவம் சேர்க்காமல் உணவே உடலுக்குள் இறங்காது.
பொதுவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் இறைச்சியை உண்டு வருகின்றனர். கொன்னா பாவம் தின்னா போச்சு என்ற ஒரு சொல் வழக்கு நம்ம ஊரில் இருக்கிறது. ஒவ்வொரு முறை இறைச்சி உண்ணும் போதும் அதற்காக நாம் விலங்குகளை கொள்ள வேண்டியுள்ளது.
அதனால்தான் இறைச்சி சாப்பிடுவது மனிதாபிமானமற்ற செயல் என விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் சைவ விரும்பிகள் விமர்சிக்கின்றனர். ஆனால் இனி அப்படியான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இதனை ஈடுகட்ட பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சி உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா நிறுவனம்தான் இந்த செயற்கை சிக்கனை தயாரித்துள்ளது.







