--- --:--:-- --

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சோகம்..!

1

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான சேத்து கொடியில் சிக்கி 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்னையில் பணிபுரியும் சகோதரர் தங்களின் மகள்கள் சுசித்ரா மற்றும் காமாட்சி ஆகிய இருவரையும் விடுமுறைக்காக அனுப்பியுள்ளனர்.

 

விடுமுறை முடிந்து சனிக்கிழமை சென்னை திரும்ப இருந்த நிலையில் தனது பாட்டியுடன் சிறுமி குளிக்க சென்றுள்ளனர். சிறுமிகளை குளிக்கச் சொல்லி விட்டு பாப்பாத்தி துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிறுமிகளின் பேச்சு சத்தம் கேட்கவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்தவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் வந்து தண்ணீரில் மூழ்கி தேடி பார்த்துள்ளனர்.

 

அப்பொழுது மண்வெட்டி எடுத்து சென்ற சேர்த்து குழியில் மூழ்கி சிறுமிகள் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon