வானிலிருந்து பயங்கர சத்தத்துடன் விழுந்த விண்கல்..!
வானிலிருந்து பயங்கர சத்தத்துடன் விண்கல் விழுந்த சம்பவம் நடந்துள்ளது. துருக்கியின் இசைமின் நகரில் வானிலிருந்து சிறிய விண்கல் போன்ற உருவம் ஒன்று பிரகாசமான ஒளியுடன் வானிலிருந்து விழுகிறது.
அப்பொழுது வானமே பச்சை நிறத்தில் ஜொலிக்கிறது. இந்த அதிசய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பிரகாசமான ஒளியுடன் வானில் இருந்து விழுந்தது விண்கல்லாக இருக்கலாம் எனவும் அல்லது ஏலியன்களின் கருவியாக இருக்கலாம் எனவும் கருத்துக்கள் நிலவுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தி அறிந்த அப்பகுதி மக்களிடையே ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







