மரங்களை நட்டால் ஆண்களும் தாயாகலாம்: சீமான்
காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை என விஜயை மறைமுகமாக சீமான் தாக்கி பேசியுள்ளார்.
மரங்களின் மாநாட்டில் பேசிய அவர், டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை விற்கும் அவல நிலை ஏற்படும் எனவும், வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணியை மரங்கள் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மண்ணில் மரங்களை நட்டால் ஆண்களும் தாயாக முடியும் என்றும் கூறியுள்ளார்.





