மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேரும் – எடப்பாடி பழனிசாமி
அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறது; இது இயற்கையான கூட்டணி. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி; மக்கள் விரோத திமுகவை அகற்றும் நோக்கில் கூட்டணி அமைப்பு. வலிமையான தமிழகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.






