--- --:--:-- --

எ.வ.வேலுவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தடை – தமிழக அரசு மேல்முறையீடு

6

26-ந்தேதி எ.வ.வேலு மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரை தேடப்படும் நபராக அறிவித்து போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். தனக்கு எதிரான வழக்கையும், லுக்-அவுட் நோட்டீசையும் ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் எ.வ.வேலு மனு தாக்கல் செய்தார்.

 

 

 

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜூலை 27-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை மனுதாரருக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது. லுக்-அவுட் நோட்டீஸ் விவகாரத்தில் எ.வ.வேலு ஜூலை 15-ந் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என்று நிபந்தனை விதித்து, லுக்-அவுட் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

 

 

 

ஐகோர்ட்டின் இந்த தடையினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வழக்கை அவசரமாக நாளைய தினமே விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு வக்கீல் தலைமை நீதிபதி சூரியகாந்திடம் வலியுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon