--- --:--:-- --

கொரொனா தொற்றுக்கு மீரட்டை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பலி..!

1

த்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இரட்டை சகோதரர்கள் கொரொனா தொற்றுக்கு அடுத்தடுத்து பலியானது சோகத்தை ஏற்படுத்துகிறது. கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர்களாக ஜார்ஜ்டி ரேமன் மற்றும் சோஜா இருவரும் பல ஆண்டுகளுக்குப் முன்பு உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

 

இவர்களுக்கு கடந்த 1997ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் இரண்டு மகன்கள் பிறந்தனர். கோவை காருண்யா பல்கலைக் கழகத்தில் பயின்ற இருவரும் தற்போது இரு வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். கடந்த மாதம் மீரட்டுக்கு வந்த ஜோஃப்ரட் மற்றும் ரால்ப்ரட் இருவரும் கடந்த 23ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாடினர்.

 

திடீரென இருவருக்கும் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொரொனா தொற்று உறுதியான நிலையில் ஒரு நாள் இடைவெளியில் இரு சகோதரர்களும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.

 

சில நிமிட இடைவெளியில் பிறந்த இருவரும் ஒரு நாள் இடைவெளியில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon